BREAKING NEWS
latest

Sunday, June 27, 2021

இந்தியாவிலிருந்து ஜூலை-7 முதல் விமான சேவைகள் தொடங்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக எமிரேட்ஸ் பயணிகள் கேள்விக்கு பதிலளித்துள்ளது

பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து ஜூலை-7 முதல் விமான சேவைகள் தொடங்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது

Image credit: Emirates Airlines

இந்தியாவிலிருந்து ஜூலை-7 முதல் விமான சேவைகள் தொடங்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக எமிரேட்ஸ் பயணிகள் கேள்விக்கு பதிலளித்துள்ளது

இந்தியாவில் இருந்து வருகின்ற ஜூலை-21 வரையில் விமான சேவைகள் நிறுத்தி வைப்பதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு விமானம் நிறுவனம் இந்தியாவில் இருந்து சேவைகள் ஜூலை- 7 முதல் மீண்டும் தொடங்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ட்விட்டர் மூலம் பயணிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் எமிரேட்ஸ் அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். எதன் அடிப்படையில் பயணிகளின் நிறுவனம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மற்றும் செல்லுபடியாகும் விசா உள்ளவர்கள் புதிதாக அறிவிக்கப்பட்ட பயண விதிமுறைகள் பின்பற்றி இந்தியாவில் இருந்து ஜூன்-23 முதல் துபாய்க்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் கடந்த வாரம் அறிவித்து இருந்தனர், ஆனால் இந்த நாள் வரையில் விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கலாமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலையே உள்ளது.

இது குறித்து சமூக ஊடகங்களிலும் பிற வழிகளிலும் தினசரி நூற்றுக்கணக்கான விசாரணைகளை விமான நிறுவனங்கள் பெற்று வருகின்றன. ஆனால் சரியான பயண விதிகள் மற்றும் அனுமதிகள் குறித்த தகவல்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன எனவும், விரைவில் இது குறித்த கூடுதல் தகவல்களை பெற முடியும் என்று நம்புவதாக எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பயணம் தொடர்பான சமீபத்திய தகவல்கள் உடனுக்குடன் அறிய வாடிக்கையாளர்கள் தங்கள் வலைத்தளத்தைப் பார்க்குமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Add your comments to இந்தியாவிலிருந்து ஜூலை-7 முதல் விமான சேவைகள் தொடங்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக எமிரேட்ஸ் பயணிகள் கேள்விக்கு பதிலளித்துள்ளது

« PREV
NEXT »