எமிரேட்ஸ் எயர்லைன்ஸ் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு ஜூன்-23 முதல் மீண்டும் விமான சேவையை தொடங்குவதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
Image : Emirates Airlines
எமிரேட்ஸ் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு ஜூன்-23 முதல் மீண்டும் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது
துபாய் விதித்துள்ள பயணத் தடைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து விமானங்களை மீண்டும் தொடங்குவதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தியாவில் இருந்து ஜூலை-6 வரை சேவைகளை நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்திருந்தது, ஆனால் புதிய அனுமதியை அடுத்து ஜூன்-23 ஆம் தேதி முதல் சேவையை மீண்டும் தொடங்க எமிரேட்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியா,தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து துபாய்க்கு பயணம் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிவித்து துபாய் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு எடுத்த நடவடிக்கையை வரவேற்பதாக எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த நிபந்தனைகளுக்கு இணங்க மூன்று நாடுகளிலிருந்தும் ஜூன்-23 முதல் சேவைகளை தொடங்கும். மேலும் எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமையைக் கண்காணித்து, சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் பயணத் துறையின் பாதுகாப்பிற்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கிய உச்சக் குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் இரண்டு டோஸ் பெற்ற குடியுரிமை விசா வைத்திருப்பவர்கள் 23 ஆம் தேதி முதல் துபாய் திரும்புவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்கள். மேலும் எதிர்மறை பி.சி.ஆர் பரிசோதனை முடிவு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுத்திருக்க வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினருக்கு இதில் சலுகைகள் கிடைக்கின்றன. QR குறியீட்டைக் கொண்ட சோதனை முடிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் விரைவான பி.சி.ஆர் (Rapid test) சோதனைக்கு உட்படுத்தப்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிறகு, பயணிகள் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக உட்படுத்தப்படுவார்கள். இதற்கானமுடிவுகள் வெளிவரும் வரை நிறுவன தனிமைப்படுத்தலில் பயணி இருக்க வேண்டும். சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள் மற்றும் இராஜந்திர பிரதிநிதிகளும் இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை நிலவரப்படி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்தியாலில் இருந்து வரும் பயணிகள் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்வது தொடர்பான Update மற்றும் பயணச்சீட்டு விலை உள்ளிட்டவை காட்டவில்லை வரும் மணிநேரத்தில் முன்பதிவு செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.