இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்கள் அடுத்த வாரம் அரசு முறை பயணமாக குவைத் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : ஜெயசங்கர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்த வாரம் குவைத் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் அடுத்த வாரம் அரசு முறை பயணமாக குவைத் வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதும், கோவிட் நெருக்கடியில் இந்தியாவுக்கு உதவிய குவைத்துக்கு நன்றி தெரிவிப்பதும் இந்த பயணத்தின் நோக்கம் என்று தெரிகிறது.
கடந்த வாரம்,குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் டாக்டர்.அகமது நாசர் அல் முஹம்மது அல் சபா அவர்களுடன் ஜெயசங்கர் அவர்கள் தொலைபேசி மூலம் உரையாடினார். மேலும் அமைச்சரின் இரண்டு நாள் அரசு முறை பயணத்தின் போது,குவைத்தில் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து குவைத் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.