சவுதியில் உள்ள 60,000 பேருக்கு மட்டுமே இந்த முறையும் ஹஜ் செய்ய வாய்ப்பு, வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை
Image : புனித மக்கா
சவுதியில் ஹஜ் புனித யாத்திரை செல்ல இந்த வருடமும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை
சவுதியில் தற்போதைய சூழ்நிலையில் கோவிட் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து அதாவது சவுதிக்கு வெளியில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டும் ஹஜ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அதற்கு பதிலாக கடந்த ஆண்டு செய்தது போலவே சவுதி அரேபியாவில் வாழும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மட்டுமே இந்த முறையும் ஹஜ் செய்ய முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 60,000 யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கபடும். சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஹஜ் புனித யாத்திரை செல்ல ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்நு இரண்டாவது வருடமாக இந்தியர்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான யாத்திரைகள் புதிய ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.