குவைத்தில் சட்டவிரோத கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டவர்களை உடனடியாக நாடு கடத்த அமைச்சர் உத்தரவு
Image : உள்துறை அமைச்சர்
குவைத்தில் சட்டவிரோத கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டினர் நாடுகடத்தப்படுவார்கள்
குவைத் நாட்டின் பொது நலன், பாதுகாப்பு மற்றும் ஒழுக்கங்களுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கவனத்திற்கு வந்தால் அத்தகைய வெளிநாட்டினரை உடனடியாக நாடுகடத்த உள்துறை அமைச்சர் ஷேக் தாமர் அல் அலி உத்தரவு பிறப்பித்துள்ளார். குவைத் சிட்டியில் உள்ள எராடா சதுக்கத்தில்(Irada Square) கடந்த தினங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றது மற்றும் அரசாங்க முடிவுகளை தவறாகப் பயன்படுத்திய உள்ளிட்ட காரணங்களுக்கு ஆளான வெளிநாட்டவரை நாடு கடத்த அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் அவர் சட்டவிரோத கூட்டங்கள் மற்றும் குவைத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடும் வெளிநாட்டவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார் எனவும்,இதில் எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.