அமீரகத்தில் உங்கள் தொலைபேசி கட்டணத்தை செலுத்த தாமதப்படுத்தினால்,கூடுதலாக இணைப்பு கட்டணத்தை செலுத்த வேண்டியது இருக்கும்
அமீரகத்தில் தொலைபேசி கட்டணத்தை செலுத்த தவறினால்,கூடுதலாக இணைப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொலைபேசியின் பில் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் சேவைகள் ரத்து செய்யப்படுவதோடு மீண்டும் இணைப்பு கட்டணமும் செலுத்த வேண்டும் என்று நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான எடிசலாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கூடுதலாக,பில்கள் செலுத்துவதில் ஏற்படும் காலதாமதம் வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பெண்களை(Credit Score) பாதிக்கும். எதிர்காலத்தில் வங்கிகளிடமிருந்து தனிப்பட்ட முறையில் நிதி சேவைகள்(Bank loans) பெறுவது கடினமாக இருக்கும் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
எடிசலாட் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கட்டணம் செலுத்த அறிக்கையினை அனுப்பும், கட்டணம் செலுத்த அந்த மாதம் 15 ஆம் தேதி வரையில் கால அவசரகால வழங்குகிறது. இந்த நேரத்திற்குள் பில்கள் செலுத்தப்படாவிட்டால், சேவைகள் ரத்து செய்யப்படும். அதன் பிறகு, பில் முழுமையாக செலுத்தப்பட்டாலும், மறு இணைப்புக் கட்டணத்தை செலுத்திய பின்னரே சேவைகள் மீண்டும் வழங்கப்படும், இதற்காக வரி உட்பட 26.25 திர்ஹாம் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியது இருக்கும். அல் எத்திஹாட் கிரெடிட் பீரோயில் நல்ல மதிப்பெண்களை பராமரிக்க சரியான நேரத்தில் பில்களை செலுத்த வேண்டியது அவசியமாகும்.
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆட்டோ பே சிஸ்டம் மூலம் சரியான நேரத்தில் பில்களை செலுத்துவது நல்லது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான "டு"தங்கள் வாடிக்கையாளர்கள் 100 நாட்களுக்குள் பில் கட்டணத்தை செலுத்தினால், வேறு எந்த கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.