BREAKING NEWS
latest

Friday, June 11, 2021

இந்திய,குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முன்னிலையில் வீட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னிலையில் வீட்டுத் தொழிலாளர்கள் அனுப்புவது உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது

Image : இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள்

இந்திய,குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முன்னிலையில் வீட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது

குவைத் வெளியுறவு அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய வீட்டுத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவழைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குவைத்தில் உள்ள இந்திய வீட்டுத் தொழிலாளர்களை சட்ட கட்டமைப்பிற்குள் கொண்டுவருவது. மேலும் அவர்களின் நியமனத்தை மிகவும் திறமையாக்குவதோடு,அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பையும் கொடுப்பது ஆகும். இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மறுஆய்வு மற்றும் மதிப்பீட்டி செய்வதற்காக கூட்டுக் குழுவை அமைப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான வருடாந்திர விவாதங்களுக்கும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மஜ்தி அகமது அல் தஃபிரி முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அகமது நாசர் அல் முகமது அல் சபா மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கரும் இர இராஜதந்திர உறவுகள் குறித்த பேச்சுவார்த்தையும் நடத்தினார். குவைத் வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர்.அப்துல்லா இசா அல் சல்மானும் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் இந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் இருநாடுகளின் உறவுகள் மேம்படுத்துவது தொடர்பானவும் விவாதித்தனர். இரு நாடுகளும் உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டன. கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடி குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் இரு நாடுகளின் குடிமக்கள் எதிர்கொள்ளும் தடுப்பூசி பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான உறுதிப்பாட்டை அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் குவைத்தில் பணிபுரியும் இந்தியர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா-குவைத் கூட்டு ஆணையத்தின் முதல் கூட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும். இந்தியா மற்றும் குவைத் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60-வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களின் துவக்க நிகழ்வும் இந்த சந்திப்பு நடைபெற்றது. இது ஒரு வருடம் நீண்ட கொண்டாட்டமாக இருக்கும். கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக போராடிய இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் உட்பட உதவிகள் பொருட்கள் அனுப்பியுள்ளதாக குவைத்திற்கு இந்தியாவின் சார்பில் எஸ்.ஜெயசங்கர் நன்றி தெரிவித்தார். அதேபோல் நாளை(11/06/21) வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு ஆன்லைன் வழியாக இந்தியர்கள் மத்தியில் எஸ்.ஜெயசங்கர் அவர்கள் உரையாற்றுவார்.

Add your comments to இந்திய,குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முன்னிலையில் வீட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது

« PREV
NEXT »