அமீரக மற்றும் இந்தியா இடையேயான பயணத்தடை ஜூலை-6 வரையில் நீட்டித்துள்ளதாக பயணியின் கேள்விக்கு பதிலாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது
Image credit: Air India
அமீரக மற்றும் இந்தியா இடையேயான பயணத்தடை ஜூலை-6 வரையில் நீட்டித்துள்ளதாக ஏர் இந்தியா விளக்கம்
இன்று ஜூன்-23 ,முதல் இந்தியா துபாய் இடையேயான விமான சேவை நிபந்தனைகளுடன் மீண்டும் இயக்க அனுமதி அளித்து அறிவிப்பு வெளியான நிலையில் பல்வேறுபட்ட குழப்பங்கள் மத்தியில் எமிரேட்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் எதுவும் பயணச்சீட்டு முன்பதிவு எதையும் இந்த நேரம் வரையில் துவங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஆனது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜூலை-6 வரையிலும் விமானங்களை நிறுத்தியுள்ளது எனவும்,ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பயணத் தடையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் புதுப்பிக்கப்பட்ட புதிய Update உடனுக்குடன் அறிய தங்கள் வலைதளத்தை பார்வையிடலாம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்காக ஒரு வழி சேவை திட்டமிட்டபடி தொடரும் எனவும் விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தங்களுடைய தரப்பு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் எதாவது மாற்றங்கள் ஏற்படுமா....????என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எமிரேட்ஸ் உள்ளிட்ட மற்ற விமான நிறுவனங்கள் இது தொடர்பாக என்ன அறிவிப்பை வெளியிடும் என்பதை பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.