இந்தியா அமீரக இடையேயான உள்நுழைவு சேவைகளுக்கான தடை ஜூலை-6 வரையில் நீட்டித்து சற்றுமுன் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது
Image : Dubai Airport
இந்தியா அமீரக சேவைகளுக்கான தடை ஜூலை-6 வரையில் நீட்டித்து சற்றுமுன் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது
இந்தியா அமீரகம் இடையேயான வருகை(உள்நுழைவு) சேவைகளுக்கான தடை ஜூலை-6 வரையில் நீட்டித்துள்ளதாக சற்றுமுன் Air-india Express செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அமீரகத்தில் இருந்து வெளியேற(தாயகம் செல்ல) எந்த பிரச்சனையும் இல்லை . இந்த தடை தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து துறை தங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இந்த தடையில் இருந்து குடிமக்கள் மற்றும் சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பயணிகள் தங்கள் விமான பயணச்சீட்டுகளை மாற்றி அமைக்குமாறும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு எமிரேட் நிறுவனம் ஜூன்-30 வரையில் தடை நிலுவையில் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இதற்கிடையே இந்த புதிய அறிவிப்பை Air-india Express இன்று(08/06/21) செவ்வாய்க்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் தீவிரமடைந்த கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல்-24 இந்தியா-அமீரகம் இடையிலான உள்நுழைவு விமான சேவை தீடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர் அது மே-30 வரையில் என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் மேலும் நீட்டித்து இந்த மாதம்-30 வரையில் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.