இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்கள் இன்று அதிகாலை குவைத் வந்தடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : குவைத் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெய்சங்கர்
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்கள் குவைத் வந்தடைந்தார்
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் அவர்கள் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று அதிகாலை குவைத் வந்தடைந்தார். அமைச்சரை குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் குவைத் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அமைச்சர் தனது வருகையின் ஒரு பகுதியாக,குவைத் அதிகாரிகளுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதத்தையும் குவைத் அமீரிடம் ஜெயசங்கர் ஒப்படைப்பார். வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பின்னர் அவர் குவைத் வருவது இதுவே முதல் முறையாகும். அமைச்சர் நாளை(11/06/21) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தின் மத்தியில் நேரடியாக உரையாற்றவுள்ளார்.
அனைத்து இந்திய வெளிநாட்டவர்களும் அமைச்சருடன் ஆன்லைன் வழியாக பங்கேற்கலாம்.ஆன்லைன் சந்திப்பு பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.