அமீரகம் மற்றும் சவுதியில் நடந்த வெவ்வேறான சம்பவங்களில் இரண்டு இந்திய இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : கொல்லப்பட்ட சனல் மற்றும் விஷ்ணு
அமீரகம் மற்றும் சவுதியில் இந்திய இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தன்னுடைய தங்குமிடத்தின் அருகில் வைத்து ஏற்பட்ட மோதலில் இந்திய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர் கேரளா மாநிலம் இடுக்கியை அடுத்த கருணபுரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் விஷ்ணு(வயது-29) செவ்வாய்க்கிழமை(நேற்று) பிற்பகல் 1 மணியளவில் ஷார்ஜாவின் அபுஷாஹலாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள ஆப்பிரிக்கா நாட்டினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட விஷ்ணு அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஷார்ஜாவில் சாலூன் ஊழியராக இருந்த விஷ்ணு வேலை செய்துவந்த நிலையில், நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் வேலைக்கு செல்லவில்லை. உடலை ஷார்ஜா போலீஸ் மருத்துவமனை சவக்கிடங்கிற்கு மாற்றினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு சம்பவத்தில் சவுதியில் இந்திய இளைஞர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் கேரளா மாநிலம் கொல்லம் இத்திக்காரா பகுதியை சேர்ந்த சனல்(வயது-35) என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் இன்று(புதன்) பிற்பகல் சவுதியின்,அல் ஹசாவில் சாலையோரத்தில் நடந்துள்ளது. பால் விநியோக நிறுவனத்தில் விற்பனையாளராக இருந்த சனல் கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வருகிறார்.
சனலுக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்கின்ற கானா நாட்டவரான சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாய்மொழி தகராறுதான் கொலைக்கு வழிவகுத்தது. மேலும் காயமடைந்த சக ஊழியரும் கானா நாட்டவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பொலிசார் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் உயிரிழந்த சனலின் உடலை அல் ஹசா மருத்துவமனை சவக்கிடங்கிற்கு மாற்றியுள்ளனர்.