இந்தியாவில் கோவிஷீல்ட் 2 டோஸ் எடுத்துக்கொண்ட இந்தியர்கள் துபாய் வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
இந்தியாவில் கோவிஷீல்ட் 2 டோஸ் எடுத்துக்கொண்ட இந்தியர்கள் துபாய் வரலாம் என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் இந்தியர்கள் நுழைவதற்கான தடையை நீக்குவதன் ஒரு பகுதியாக அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட Validity Visa உள்ள இந்தியர்கள் ஜூன்-23 முதல் வரலாம் என்று அறிவித்ததால் வெளிநாட்டவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இதில் இந்தியர்கள் எந்த தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்ற குழப்பத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து துபாய் சுகாதார ஆணையம் இன்று(20/06/21) ஞாயற்றுக்கிழமை மாலையில் விளக்கம் வெளியிட்டது.
அதில் ஃபைசர் பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா அல்லது கோவிஷீல்ட், சினோஃபாம் மற்றும் ஸ்பூட்னிக் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எனவும், அமீரகத்தில் வழங்கும் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் இந்தியாவில் கிடைக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆகியவை ஒரே தடுப்பூசி என்றும் எனவே கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துபாய் சுகாதார ஆணையத்தின் அறிவிப்பை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தெளிவான விளக்கம் விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மற்ற அமீரகங்களின் விசா கைவசம் உள்ள இந்தியர்கள் அமீரகம் திரும்புவது குறித்த புதிய அறிவிப்புகள் எதுவும் தற்போது வரையில் வெளியாகவில்லை.
இதற்கிடையே indiGo, Flydubai மற்றும் Emirates ஆகியவை ஜூன்-23 முதல் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமான சேவைகளை துவங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் துபாய் வருவதற்காக விதிமுறைகள் குறித்து விரிவாக இந்த link-ஐ click செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம் https://www.arabtamildaily.com/2021/06/dubai-has-eased-travel-restrictions-for-travelers-from-india.html