அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் ஜூன் 23 முதல் துபாய் திரும்பலாம் என்ற புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது
Image : Dubai Airport
அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் ஜூன் 23 முதல் துபாய் திரும்பலாம்
இந்தியா,தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணத்தடை தொடர்பான நடைமுறைகளை இன்று(19/06/21) புதுப்பித்துள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர். திருத்தப்பட்ட நடைமுறையின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுகாதரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட Validity Work Permit(Validity Visa) உள்ள இந்தியர்கள் 2021 ஜூன் 23 புதன்கிழமை முதல் துபாய்க்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போதைக்கு முதல்கட்டமாக இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த இந்தியர்கள் புதிய அறிவிப்பு மூலம் மீண்டும் துபாயில் நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. துபாய் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக்கான உச்ச குழு ஜூன்-19 சனிக்கிழமையான இன்று இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயண நெறிமுறைகளை புதுப்பித்துள்ளது.
இருப்பினும்,இந்த புதிய விதிமுறைப்படி துபாய் வருகின்ற பயணிகளும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கியூஆர் குறியீடு உட்பட உள்ள எதிர்மறையான கோவிட் -19 சோதனை முடிவை உடன் எடுத்துக்கொண்டு வரவேண்டும். மேலும் பயணி துபாய் விமான நிலையத்திற்கு வந்ததும் அங்கு வைத்து மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வரும் வரையிலான 24 மணி நேரத்திற்கு பயணிகள் சுய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும்.