இந்தியாவில் சிக்கியுள்ள விசா காலாவதி ஆகின்ற அமீரக இந்திய தொழிலாளர்கள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார்
Image: அமன் பூரி
இந்தியாவில் சிக்கியுள்ள விசா காலாவதி ஆகின்ற அமீரக தொழிலாளர்கள் கவலைப்பட தேவையில்லை அதிகாரி தகவல்
இந்தியாவில் விடுமுறை உள்ளிட்ட பல்வேறுபட்ட காரணங்களுக்காக வந்து விமான சேவைகள் தற்காலிகமாக ரத்தாகியுள்ள நிலையில், அமீரகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள விசா காலாவதி ஆகின்ற அமீரக தொழிலாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்று துபாய் இந்திய துணைத் தூதரகம் அமன் பூரி தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து அமீரக அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவும்,இதற்கு தீர்வு காண்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் இருந்து வாக்குறுதி கிடைத்துள்ளதாகவும்,நிகழ்ச்சி ஒன்றில் இந்திய செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போது இதை தெரிவித்தார்.
விடுமுறை முடிந்தும் அமீரகம் திரும்ப முடியாத காரணத்தால் மீண்டும் வேலையில் சேர முடியாத நிலையில் நிறைய இந்தியர்கள் தாயகத்தில் சிக்கியுள்ளனர்,மேலும் திருப்பி அமீரகம் வந்தால் செய்துவந்த வேலையும் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையிலும் இந்தியர்கள் பலரும் உள்ளனர்.மேலும் பல நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் அமீரகம் திரும்பாத காரணத்தால் வேறு வேலைகளை தேடுமாறும் தங்களிடம் கூறிவிட்டதாக பலரும் ஆதங்கத்தை பகிர்வு செய்து உள்ளனர்.
இதற்கிடையே விசா காலாவதி மற்றும் வேலையை இழந்து விடுவோமோ என்ற கவலையில் சிலர் பல லட்சங்கள் செலவு செய்து,தடை இல்லாத நாடுகளில் தங்கியிருந்து அமீரகத்தில் நுழைந்தும் வருகின்றனர். சாதாரண தொழிலாளர்களுக்கு இவ்வுளவு கட்டணம் செலுத்தி அமீரகத்தில் நுழைவது என்பது இயலாத காரியமாகும். இதற்கிடைய இந்தியர்கள் நுழைய தடை விதித்துள்ள வளைகுடா நாடுகள் தங்களுடைய விசாவை நீட்டிப்பு செய்து வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன் லட்சக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா திரும்புவதற்காக இந்தியாவில் காத்திருக்கிறார்கள்.