குவைத்தில் புதன்கிழமை வரை தூசிக்காற்றுடன் வானிலை தொடரும் என்று வானிலையாலர் முகமது கரம் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்
Image : மணல் சாலையில் குவிந்துள்ள காட்சி
குவைத்தில் புதன்கிழமை வரை தூசிக்காற்றுடன் வானிலை தொடரும் என்று வானிலையாலர் தெரிவித்துள்ளார்
குவைத்தில் தூசி நிறைந்த வானிலை புதன்கிழமை வரை தொடரும் என்று வானிலை ஆய்வாளர் முகமது கரம் தெரிவித்தார். குவைத் கடந்த இரண்டு நாட்களாக பலத்த தூசிக்காற்றுடன் கூடிய வானிலை நிலவியுள்ள நிலையில் நாட்டின் சில பகுதிகளில் தூரப்பார்வை 500 மீட்டருக்கும் குறைவாக உள்ளது எனவும் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் வரையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இதை கருத்தில் கொண்டு வெளியே செல்லும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்,அவசர உதவிக்கு 112 அல்லது 1804000 எண்களில் அழைக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே பல முக்கிய சாலைகளில் மணல் மலைபோல் குவித்துள்ளது, அதை அகற்றவும் பணிகள் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகின்றன. ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.