இந்தியாவில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களின் சான்றிதழ்கள் குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கான அறிகுறிகள் வெளியாகியுள்ளது
இந்தியாவில் எடுக்கப்பட்ட கோவிட்ஷீல்டு தடுப்பூசியை குவைத் சுகாதாரத்துறை அங்கீகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் இருந்து கோவிட்ஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களின் தடுப்பூசி சம்பந்தப்பட்ட சான்றிதழை குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கான அறிகுறிகள் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி பெற்றவர்களின் சான்றிதழ்களை பதிவு செய்ய சிறப்பு Link-ஐ குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த இணைப்பு மூலம் பதிவு செய்த சிலருக்கு சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது.
தடுப்பூசி எடுத்த இந்தியர்கள் பலரும் இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட கோவிட்ஷீல்டு என்ற சான்றிதழை பதிவேற்றிய நிலையில்,குவைத் சுகாதாரதுறை அமைச்சகத்தால் ஆக்ஸ்போர்டு என அங்கீகரிக்கப்பட்ட செய்தி பதிலாக கிடைத்துள்ளது. மேலும் முதல் டோஸ் பெற்று இரண்டு வாரங்கள் கடந்த நபர்களின் சான்றிதழும் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதே சமயம், அமைச்சகம் வெளியிட்டுள்ள தளத்தில் பதிவு செய்து ஒரு வாரம் ஆன பிறகும், சுகாதரத்துறை அமைச்சகத்திலிருந்து எந்த விதமான பதிலும் பெறாத பலரும் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுவரையில் பதிவு செய்யாத நபர்கள் இந்த Link-யில் https://vaxcert.moh.gov.kw/SPCMS/PH/CVD_19_Vaccine_External_Registration.aspx சென்ற நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழை பதிவு செய்யலாம். மேலும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டினருக்கு எதிர்காலத்தில் குவைத்தில் நுழைவதற்காக அறிவிக்கப்படும் உத்தரவுகளில் சலுகைகள் கிடைக்ககூடும் என்று எதிர்பார்க்கலாம்.