குவைத் கொரோனா அவசரக் குழு வெளிநாட்டிலிருந்து விவசாயத் தொழிலாளர்களை(மசரா) ஆள்சேர்ப்பு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது
Image : Kuwait Wafra Farms
குவைத்திற்கு வெளிநாட்டிலிருந்து விவசாயத் தொழிலாளர்களை(மசரா) ஆள்சேர்ப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது
குவைத்தின் கொரோனா அவசரநிலை குழு வெளிநாடுகளிலிருந்து விவசாயத் தொழிலாளர்களை அழைத்துவர ஒப்புதல் அளித்துள்ளது. குவைத் விவசாயிகள் சங்கம் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குவைத்தில் உள்ள பண்ணையின் உரிமையாளர்கள் குவைத் அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Al-Salama தளம் மூலம் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை குவைத் சுகாதாரத்துறையின் விதிமுறைக்கு உட்பட்டு ஆட்சேர்ப்பு செய்யலாம்.
மசரா(Masara) விசாக்கள் எனப்படும் விவசாய விசாக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் ஏராளமான புகார்கள் எழுந்தன. இடைத்தரகர் உள்ளிட்டவர்கள் இப்படிப்பட்ட விசாக்களை பரவலாக தவறாகப் பயன்படுத்துவதால் இந்த வகை விசாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், விவசாயத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் இந்தவகை விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.