குவைத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் வேலை விசாக்களை வழங்க அனுமதியளித்தது புதிய உத்தரவு வெளியாகியுள்ளதாக மாலையில் செய்தி வெளியாகியுள்ளது
குவைத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் வேலை விசாக்களை வழங்க அனுமதியளித்தது புதிய உத்தரவு வெளியாகியுள்ளது
குவைத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணியாற்ற மருத்துவம், நர்சிங், நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு நுழைவு விசாக்களை வழங்க குவைத்தின் "கொரோனா அவசரக்குழு ஒப்புதல்" அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான செய்தியை தினசரி பத்திரிக்கை இன்று(16/06/21) மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தாக்கல் செய்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனுமதி கடிதத்தை அமைச்சரவை பொதுச்செயலாளர், உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் இசாம் அல்-நஹாம் அவர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் மருத்துவமனைகள் வெளிநாட்டிலிருந்து புதிய விசாக்களில் ஊழியர்களை அழைத்து வர முடியும். அதேபோல் தாயகம் சென்று சிக்கி தவிக்கின்ற தனியார் துறை மருத்துவ ஊழியர்களும் குவைத்திற்கு மீண்டும் திரும்ப முடியும்.
அதே நேரத்தில் தாயகம் சென்று சிக்கியுள்ள கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களை திருப்பி அழைக்க அனுமதி வழங்க வேண்டி கோரிக்கை மனுவை ஜாமியா கூட்டமைப்பு கொரோனா அவசரக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.