குவைத்தில் விசிட் விசாவில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்ற வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவை தவறான முறையில் பரப்பப்படுகிறது
Image : விசா நகல் செய்திக்காக மட்டும்
குவைத்தில் விசிட் விசாவில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்ற செய்தியின் உண்மை நிலை இதுதான்....
குவைத்தில் விசிட் விசாவில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்று சில தளத்தில் தவறுதலாக செய்தி பரப்பப்பட்டு வருகின்றன அதன் உண்மை நிலையினை இங்கே அறியலாம். அதாவது குவைத்தில் நீங்கள் தொழில் துவங்குவது தொடர்பாக வணிக பார்வையாளர் விசாவில்(Business Visit Visa) வந்திருந்தால் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்றே கொரோனா அவசர குழு அனுமதி அளித்து நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தியின் மையக்கரு ஆகும். ஆனால் சிலர் விசிட் விசாவில் குவைத்தில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்ற வண்ணத்தில் செய்தியை திரித்து பரப்பி வருகின்றனர்.
இந்த புதிய அறிவிப்பு மூலம் சாதாரணமாக குவைத்தில் வேலை தேடுகின்ற வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர் பெரிதாக பயனடைய மாட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவியுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கொரோனா அவசரக் குழு நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. எனவே வணிக பார்வையாளர் விசாவில் தற்போது நாட்டில் தங்கியிருப்பவர்கள் மட்டுமே குவைத்தை விட்டு வெளியேறாமல் வேலை விசாவுக்காக மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பிற நடைமுறைகள் முடித்து தங்களின் வணிக பார்வையாளர் விசாவை பணி விசாவிற்கு மாற்ற முடியும்.
நாட்டிற்கு வெளியில் இருந்து புதிதாக வணிக பார்வையாளர் விசாக்களில் தொழிலாளர்களை அழைத்து வருவதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குவைத் நாட்டில் வணிக பார்வையாளர் விசாக்கள் அரிதாகவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படிப்பட்ட விசாவில் நாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த காரணத்திற்காக, புதிய அறிவிப்பு சாதாரணமாக வேலை தேடுபவர்கள் அல்லது தொழில்முனைவோருக்கு பெரிதும் பயனளிக்காது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய வணிக பார்வையாளர் விசாக்கள் வழங்கி, அவர்கள் குவைத் வந்த பிறகு அவற்றை வேலை விசாவாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டால் புதிய அறிவிப்பு பலருக்கு பயனளிக்கும்.
நாட்டில் பெரும்பாலும் தொழிலாளர் பற்றாக்குறையை சந்தித்து வருவது உணவகத் துறையில்(Restaurant) உள்ளவர்கள். இவற்றில் பெரும்பாலானவை ஜமியாக்களின் கீழ் இயங்குகின்றன. வணிக பார்வையாளர் விசா வழங்குவதற்கு பல விதிமுறைகள் உள்ளன. இந்த காரணத்திற்காக, சிறு தொழில்முனைவோருக்கு வணிக பார்வையாளர் விசா கிடைப்பது மிகவும் அரிதாகும். இதற்கு தீர்வு காண்பதற்கான ஒரே வழி என்பது ஜமியாக்களின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ஜமியாக்களின் பெயரிலேயே வணிக பார்வையாளர் விசாக்களை வழங்குவதாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இவை அனைத்தும் முற்றிலும் நடைமுறைக்கு மாறானவை ஆகும். எனவே, புதிய தொழில் விசாக்கள்(Work Visa) வழங்குவதை மீண்டும் தொடங்குவது நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறைக்கு ஒரே தீர்வாக கருதப்படுகிறது.