BREAKING NEWS
latest

Sunday, June 20, 2021

குவைத் விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

குவைத் விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளாத சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Image : Kuwait Airport

குவைத் விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை குவைத் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். தற்போது,ஒரு விமானத்தில் அதிகபட்சம் 35 பயணிகள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி ஒரு விமானத்தில் அதிகபட்சமாக 70 பயணிகளை கொண்டு விமானம் குவைத்திற்கு வரமுடியும்.

மேலும் நாள் ஒன்றுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 3,500 ஆகவும் உயரும், இந்த மாதத்திற்குள் புதிய முடிவு நடைமுறைக்கு வரும். ஆகஸ்ட் 1 முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதால், குவைத் விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதும் மற்றும் ஒரு விமானத்தில் 70 பயணிகள் பயணிக்க அனுமதி வழங்குவதும் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comments to குவைத் விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

« PREV
NEXT »