BREAKING NEWS
latest

Tuesday, June 22, 2021

குவைத் திரும்பவுள்ள வெளிநாடுகளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் இந்த தளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுத்தல்

குவைத் திரும்பவுள்ள வெளிநாடுகளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் இந்த தளத்தில் பதிவு செய்ய இந்திய தூதரகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது

Image : Kuwait Indian Embassy

குவைத் திரும்பவுள்ள வெளிநாடுகளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் இந்த தளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுத்தல்

வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட குவைத்வாழ் இந்தியர்கள் அதை பதிவுசெய்ய குவைத் இந்திய தூதரகம் ஒரு இணையதள Link-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பதிவு செய்யலாம் https://forms.gle/ZgRpFBTFV5V24Vqb8

தாயகத்தில்(இந்தியாவில்) தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை குவைத் சுகாதாரத்துறையின் தளத்தில் பதிவு செய்வது தொடர்பாக பலராலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதன் அடிப்படையில், குவைத் இந்திய தூதரகம் சார்பில் இன்று(22/06/21) செவ்வாய்க்கிழமை இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட்-1 முதல் குவைத் நாட்டின் செல்லுபடியாகும் குடியிருப்பு ஆவணங்கள்(Validity Work Permit) கைவசம் உள்ள மற்றும் குவைத் சுகாதாரதுறையால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டொஸ் பூர்த்தி செய்த வெளிநாட்டவர்களுக்கு நாட்டில் நுழைவு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரைவை முடிவு செய்துள்ளது கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது தாயகத்தில் சிக்கித் தவிக்கும் நபர்களில் கோவிட் தடுப்பூசி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை குவைத் அதிகாரிகள் முன் கொண்டு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதை கருத்தில் கொண்டு இந்த இணையதள பதிவை தொடங்கியுள்ளதாக தூதரகம் மாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் தினங்களில் தூதரத்தின் சமூக ஊடகங்கள் வழியாக அறிவிக்கட்டும் என்றும் அந்த அறிக்கையில் தூதரகம் தெரிவித்துள்ளது.

Image credit: Indian Embassy Kuwait

Add your comments to குவைத் திரும்பவுள்ள வெளிநாடுகளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் இந்த தளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுத்தல்

« PREV
NEXT »