குவைத்திற்கு வெளியே உள்ள வெளிநாட்டினரின் அனைத்து வகையான விசாக்களும் ஆன்லைனில் புதுப்பித்தல் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சம்பந்தப்பட்ட துறை விளக்கமளித்துள்ளது
குவைத்திற்கு வெளியே உள்ள வெளிநாட்டினர் விசா ஆன்லைனில் புதுப்பித்தல் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை
குவைத்திற்கு வெளியே உள்ள வெளிநாட்டினர் விசா ஆன்லைனில் புதுப்பித்தல் செய்து வழங்கப்படாது என்று பரவும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை எனவும்,வெளிநாடுகளில் சிக்கியுள்ள நபர்களின் அனைத்து வகையான விசாக்களும் ஆன்லைனில் புதுப்பித்தல் செய்து வழங்குவது தொடரும் என்று ரெசிடென்சி விவகாரங்களின் பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட நபரின் பாஸ்போர்ட் விசா புதுப்பித்தல் செய்யும் போது ஒரு வருடத்திற்கும் மேலாக செல்லுபடியாகும் விதத்திலும் மற்றும் நிறுவனங்களுக்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என்றால் ,அரசு துறை சார்ந்த Article-17 தனியார் துறை சார்ந்த Article-18, வீட்டுத் தொழிலாளர்கள் சார்ந்த Article-20 மற்றும் குடும்பங்கள் சார்ந்த Article-22 உள்ளிட்ட அனைத்து வகையான பிரிவுகளில் கீழ் உள்ள விசாக்களும் உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தின் வழியாக ஆன்லைனில் புதுப்பிக்க முடியும். அதிகாரப்பூர்வ இணையதளமான Link: https://evisa.moi.gov.kw/evisa/home_e.do
மேலும் அந்த அறிக்கையில் குடியிருப்பு அனுமதி செல்லுபடியாகும் வரை வெளிநாட்டினர் குவைத்துக்குள் நுழைய முடியும் எனவும், அதற்கான அனுமதி வழங்கும் முறைக்கு நாட்டிற்க்கு வெளியே இருப்பவர்கள் திரும்பி வர எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும், நாட்டிற்கு வெளியே உள்ளவர்கள் 6 மாதத்திற்குள் மீண்டும் குவைத் திரும்பவில்லை என்றால் அவர்களின் குடியிருப்பு அனுமதி ரத்தாகும் என்ற விதத்தில் பரவி வருகின்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் அல்-அன்பா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டினர் குவைத்தில் நுழைய விதித்துள்ள தடை நிலுவையில் இருக்கும் வரையில் வெளிநாட்டினர் குவைத்தில் நுழைவதற்கான அனுமதி காலவரையின்றி தொடரும் எனவும் செய்தியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆதாரங்களின்படி, தற்போது 200,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் குவைத்தில் குடியிருப்பு அனுமதியைப் புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர், குடியிருப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான காலக்கெடு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியாகும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர் எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைபடி ஜூன்-27 முதல் தடுப்பூசி இல்லாமல் முக்கியமான பெரிய வணிக வளாகங்கள்,மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள், முடிந்திருந்தும் கடைகள் மற்றும் நிகழ்ச்சி அரங்குகள் ஆகியவற்றில் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.