குவைத்தில் தாய் மற்றும் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இருவரை கொலை செய்த நபரை காவல்துறையினர் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்
Image : அதிகாரி,கொலையாளி மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள்
குவைத்தில் தாய் மற்றும் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இருவரை கொலை செய்த நபரை சிறப்பு படையினர் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்
குவைத்தின் அல்-குசூர் பகுதியில் வைத்து தன்னுடைய தாயைக் கொன்ற சிரியா நாட்டை சேர்ந்தவர் தான் மஹபுலாவில் வைத்து போக்குவரத்து போலீஸ்காரரை கொலை செய்து அவளுடைய துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளான் என்பது பாதுகாப்புப் படையினரால் பெறப்பட்ட புகைப்படங்களுடன் இவன் பொருந்தியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ரோந்து வாகனத்தில் இருந்த Backup காட்சிகள் மூலம் இது உறுதியாகியுள்ளது. கொலைகாரன் முதலில்,அவரது தாயைக் கொன்ற பின்னர் மஹபுலாவுக்குச் சென்று,அந்த பகுதியில் உள்ள ரவுண்டானா ஒன்றிலுள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரரைக் கொன்றார்.
மேலும் குற்றவாளி பிடிபடாமல் தப்பித்து வெளியே சுற்றிவந்த நிலையில் அவனை பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக புகைப்படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். இதற்கிடையே குற்றவாளி சரணடைய மறுத்தால் அவனை சுட்டு பிடிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை சிறப்பு குற்றபிரிவு அதிகாரிகள் Wafra பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் துப்பாக்கியுடன் ஒளிந்திருந்த அவனை சுற்றிவளைத்து காலில் சுட்டு வீழ்த்திய பிறகு கைது செய்துள்ளதாக சில நிமிடங்களுக்கு முன்பு செய்தி வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கொலைகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளியின் பெயர் அஹ்மத் முஹம்மது(வயது-29) என்பதும் பணம் கொடுக்க மறுத்த தாயை கொலை செய்துவிட்டு மஹபுலாவில் சென்ற நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக போக்குவரத்து போலீஸ் அதிகாரி அப்துல்லேஸீஸ் மஹம்மது அல் ரஷிடி அவர்கள் தடுத்து நிறுத்தியதால் கையில் வைத்திருக்க கத்தியை கொண்டு பலமுறை குத்தியுள்ளான் இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.