குவைத்திற்கு இந்தியர்கள் திரும்புவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளதாக அமைச்சர் ஜெயசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்
Image : அமைச்சர் உரையாற்றிய காட்சி
குவைத்திற்கு இந்தியர்கள் திரும்புவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளதாக ஜெயசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்
குவைத் விதித்துள்ள பயணத்தடை காரணமாக தாயகத்தில் சிக்கித்தவிக்கும் இந்திய தொழிலாளர்கள் குவைத் திரும்புவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெளிவுபடுத்தினார். அவர் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக குவைத் வந்திருந்த நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை) மாலையில் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் வழியான நிகழ்ச்சி மூலமாக இந்தியர்கள் மத்தியில் பேசுகையில் இதை தெரிவித்தார். கோவிட் பரவல் குறைந்ததும் பயணத்தடை தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் குவைத்தில் உள்ள ஈரான் மற்றும் வளைகுடா(GCC) நாடுகளின் தூதர்களை பங்கேற்கச் செய்து அவர் நடத்திய கூட்டத்தில் வெளிநாட்டினரின் பயணம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது எனவும், இது தொடர்பாக மேலாதிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த நாடுகளின் தூதர்களுக்கு ஜெயசங்கர் வலியுறுத்தினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடைய வீட்டுத் தொழிலாளர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் வியாழக்கிழமை அன்று கையெழுத்திட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான முக்கியமான விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.