BREAKING NEWS
latest

Monday, June 7, 2021

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் பதிவு தொடங்கியுள்ளது

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில்(உங்கள் தாய் நாடுகளில்) இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கான சான்றிதழ் பதிவு செய்ய தொடங்கியுள்ளது.

Image : Official website image

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் பதிவு தொடங்கியுள்ளது

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது. அதற்காக நீங்கள் https://vaxcert.moh.gov.kw/SPCMS/PH/CVD_19_Vaccine_External_Registration.aspx என்ற இணையதள Link வழியாக நுழைந்த பிறகு உங்கள் குவைத் சிவில் Id-எண் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல்(mail id) முகவரியை பதிவு செய்ய வேண்டும். அப்போது இந்த மின்னஞ்சல் முகவரியில் ஒரு one-time password வரும். இந்த எண்ணை திரையில் தெரியும் இடத்தில் பதிவு செய்து முடித்த பிறகு,அடுத்தகட்ட நடவடிக்கைகளை நீங்கள் செய்ய வேண்டும்.

தொடர்ந்து உங்களின் தனிப்பட்ட தகவல்கள், தடுப்பூசி எடுத்துக்கொண்ட தகவல்கள் போன்றவை அடுத்ததாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் தடுப்பூசி சான்றிதழின் நகல் 500 KB அளவைத் தாண்டாத வகையில் பதிவேற்ற வேண்டும். இதன் பிறகு நீங்கள் பதிவு செய்யும் விபரங்களின் உண்மை தன்மை குறித்து குவைத் பொது சுகாதாரத்துறையின் அதிகாரிகள் பரிசோதனைகள் முடிந்து 3 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உங்களின் சான்றிதழுக்கு அங்கீகாரம் கிடைத்தால் தகவல்கள் Immune செயலி மூலம் பெறமுடியும்.

Immune பயன்பாடு செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பில் ஸ்டோரில் கிடைக்கிறது. தடுப்பூசி எடுத்தவர்களுக்கு Immune செயலியில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் வெளிநாட்டினர் குவைத்தில் நுழைவதற்காக அறிவிக்கப்படும் உத்தரவுகளில் சலுகைகள் கிடைக்ககூடும் என்று எதிர்பார்க்கலாம்.

Add your comments to குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் பதிவு தொடங்கியுள்ளது

« PREV
NEXT »