BREAKING NEWS
latest

Tuesday, June 15, 2021

குவைத்தில் முனீரா அல் வகயான் முதல் பெண் வழக்கறிஞராக வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்தார்

குவைத்தில் கொலை செய்யப்பட்ட பணிப்பெண்ணின் வழக்கை வாதித்து,வழக்கறிஞரான முனீரா அல் வகயான் என்ற பெண் வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்தார்

Image : நீதிமன்ற காட்சிகள்

குவைத்தில் முனீரா அல் வகயான் முதல் பெண் வழக்கறிஞராக வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்தார்

குவைத்தில் அரசு வக்கீலாக நீதிமன்றத்தில் ஆஜரான முதல் பெண் வழக்கறிஞராக முனீரா அல் வகயான்(first Kuwaiti female prosecutor) அவர்கள் வரலாறு பக்கங்களில் இடம்பிடித்தார். அது மட்டுமல்லாமல்,ஏழை வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த ஒரு வெளிநாட்டு பெண்மணி ஸ்பான்சரின் கொடுமைகள் காரணமாக கொல்லப்பட்ட வழக்கில்,நீதி வேண்டி சொந்த நாட்டினரான(குவைத் தம்பதியினர்) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்வதற்காக நீதியின் கவுன் அணிந்து நேற்று வரலாற்று பக்கங்களில் அவர் அடியெடுத்து வைத்தார். நீதிபதி முத்தைப் அல்-ஆர்டி தலைமையில்,நீதிபதிகளான முஹம்மது அல்-ஓடைபி மற்றும் முஹம்மது அல்-சலால் அடங்கிய இரண்டாவது பிரிவு கிரிமினல் நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் வழக்கு தொடர்பாக வாதம் நடைபெற்றது.

குடிமக்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் எந்தவிதமான பாகுபாடும் இன்றி ஒரே கூரையின் கீழ் வாழும் பாரம்பரியம் தான் குவைத்திற்கு உள்ளது எனவும், கடவுள் இந்த நாட்டை எண்ணற்ற தெய்வீக ஆசீர்வாதங்களால் வளப்படுத்தியுள்ளார் எனவும்,உலகம் முழுவதிலுமுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்காக இங்கு வந்து வாழ கடவுள் வழி செய்தார் எனவும், ஆனால் எல்லா இடங்களிலும் உள்ளது போலவே, அவர்களில் ஒரு பிரிவினர் வீட்டுத் தொழிலாளர்களால் ஏளனம் செய்வதும்,துஷ்பிரயோகம் செய்கிறார்கள் எனவும், தவறாக நடத்தப்படுகிறார்கள் எனவும் அவர் வாதாடினார். மேலும் அநியாயமாக அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது எனவும்,இத்தகைய சம்பவங்கள் சர்வதேச சமூகத்தின் பார்வையில் நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்துகிறது எனவும் வாயானின் வாதங்கள் நீதிமன்றத்திற்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சித்திரவதைகளின் சிசிடிவி காட்சிகளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

மேலும் இந்த அதிர்ச்சியூட்டும் கொலை கடந்த ஜூன் மாதம் குவைத்தில் நடந்தது. ஒரு பிலிப்பைன்ஸ் வீட்டு பணிப்பெண் உரிமையாளரான குவைத் பெண்மணியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த நேரத்தில், குவைத்தி பெண்மணியின் கணவர் வேலைக்குச் சென்றிருந்தார். வேலையிலிருந்து திரும்பி வந்த கணவருடன் சேர்ந்து, பணிப்பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். மருத்துவமனையை அடைவதற்கு முன்பே பணிப்பெண் இறந்துவிட்டார். மருத்துவமனை அதிகாரிகள் அளித்த தகவல்களைத் தொடர்ந்து, இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் வழக்கை எடுத்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் முடிவில் அதிர்ச்சியூட்டும் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.

Add your comments to குவைத்தில் முனீரா அல் வகயான் முதல் பெண் வழக்கறிஞராக வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்தார்

« PREV
NEXT »