ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு விதித்து ஓமான் உச்சக் குழு சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது
Image : Oman Police
ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது
ஓமானில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இரவுநேர பயண தடை(பகுதிநேர ஊரடங்கு) விதித்து இன்று(19/06/21)சற்றுமுன் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. நாளை ஜூன்-20(ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. இந்த தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று "ஓமான் உச்சக் குழு " தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்சக் குழு வெளியிட்டுள்ள செய்தியில், ஓமானில் தொடர்ந்து உயரும் கோவிட் பரவலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், புதிய உத்தரவு நாளை தொடங்கி மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரையில் ஊரடங்கு உத்தரவு இரவு 8:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் ஓமான் உச்ச குழு அறிவுத்தல் செய்துள்ளது.
இந்த நேரத்தில் வர்த்தக தடையும் நடைமுறையில் இருக்கும், எனவே உணவுகள் Home Delivery மட்டுமே செய்யப்படும். மேலும் முந்தைய இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளில் சலுகைகள் வழங்கப்பட்ட பிரிவினருக்கு அதே சலுகைகள் இந்த ஊரடங்கு காலத்திலும் வழங்கபடும்.