கத்தார் ஏர்வேஸ் மீண்டும் ஷார்ஜாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தினசரி சேவைகளை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
Image : Official Qatar Airways
கத்தார் ஏர்வேஸ் மீண்டும் ஷார்ஜாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தினசரி சேவைகளை தொடங்குகிறது
கத்தார் ஏர்வேஸின் தினசரி விமான சேவையினை தோஹாவிலிருந்து ஷார்ஜாவுக்கு ஜூலை-1,2021 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று "கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்" அறிவித்துள்ளது. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும். இந்த விமானம் ஜூலை- 1 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு தோஹாவிலிருந்து புறப்படும். விமானம் மாலை 4.45 மணிக்கு ஷார்ஜா வந்து மீண்டும் மாலை 5.55 மணிக்கு கத்தார் திரும்பும். இந்த விமானம் கத்தாரின் உள்ளூர் நேரப்படி 6.05 தோஹாவுக்கு மீண்டும் தரையிறங்கும். அடுத்த மாத இறுதிக்குள் 140 நகரங்களுக்கு வாரத்திற்கு 1,200 சேவைகளை இயக்கப்போவதாக கத்தார் ஏர்வேஸ் மேலும் தெரிவித்துள்ளது.