கொச்சி விமான நிலையத்தில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கவேண்டிய Rapid பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது
Image credit: Kochi Airport
துபாய் செல்பவர்கள் கொச்சின் விமான நிலையத்தில் Rapid பி.சி.ஆர் பரிசோதனை செய்ய முடியும்
இந்தியர்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துபாய் செல்வதற்கு பல்வேறு புதிய விதிமுறைகளுடன் அந்நாடு மீண்டும் அனுமதி அளித்தது. அதில் முக்கியமான ஒன்று புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு ரேபிட் பி.சி.ஆர்(Rapid Test) பரிசோதனை செய்யவேண்டும் என்பதாகும். ஆனால் இதற்கான வசதிகள் இந்திய விமான நிலையங்களில் இல்லாத நிலையில் பல்வேறுபட்ட குழப்பங்களுக்கு மத்தியில் நேற்று(23/06/21) முதல் இந்தியாவில் இருந்து துபாய்க்கு மீண்டும் தொடங்க வேண்டிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில் விரைவு ரேபிட் பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் வசதிகள் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்தின் புறப்படும் முனையம்-3 யின் பக்கத்தில் டி-2 எனக் குறிக்கப்பட்ட தூணின் அருகே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாய் செல்லும் பயணிகள் பிற பயண அனுமதிகள் அனைத்தும் பெற்றவுடன் விரைவான பி.சி.ஆர் பரிசோதனை இங்கே எடுக்கலாம் என்று கொச்சி சர்வதேச விமான நிலைய அதிகார மேலாண்மை தங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களின் வழியாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் துபாய்க்கு மீண்டும் விமான சேவைகள் துவங்கினால் அமீரகம் அங்கீகாரம் வழங்கிய 2 டோஸ் தடுப்பூசி,Validity Work Visa, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கியூஆர் குறியீடு உள்ள எதிர்மறையான கோவிட் -19 பரிசோதனைக்காக சான்றிதழ் உள்ளிட்ட புதிய பயண விதிமுறைகள் பின்பற்றி கொச்சி விமான நிலையம் வழியாக பயணிக்க முடியும். இதற்கிடையே தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டதாக புதிய தகவல் எதுவும் தற்போது வரையில் வெளியாகவில்லை.