குவைத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்க சிவில் விமானப் போக்குவரத்து துறை பரிந்துரைகளை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Image : Kuwait Airport
குவைத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்க சிவில் விமானப் போக்குவரத்து துறை பரிந்துரைகளை சமர்பித்துள்ளது
குவைத்திற்கு திரும்பும் வெளிநாட்டினர் நாட்டில் அனுமதிப்பது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் சமர்ப்பித்த பல்வேறு பரிந்துரை குறித்தும் அதன் சாத்தியக்கூறுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குவைத் சுகாதாரதுறை வரையறை செய்துள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்த வெளிநாட்டினரின் வருகைக்கு அனுமதி வழங்குவதற்கான ஒதுக்கீட்டை ஏற்படுத்தவும்,விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போதைய 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தவும், குவைத் சுகாதரத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பெற்ற மற்றும் செல்லுபடியாகும் குடியிருப்பு(Validity Visa) கொண்ட வெளிநாட்டவர்களை மட்டுமே அனுமதித்தல் போன்ற பரிந்துரைகள் முக்கியமானவை ஆகும்.
மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி முடித்தவர்களுக்கு, நாட்டில் நுழைந்து மூன்றாவது நாள் எடுகின்ற பி.சி.ஆர் பரிசோதனை எதிர்மறையாக இருந்தால் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், முதல் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்ற பிறகு நாட்டில் வருபவர்களுக்கு ஒரு வாரம் நிறுவன தனிமைப்படுத்தலும்(Institutional Quarantine) மற்றும் இரண்டாவது வாரம் வீட்டு தனிமைப்படுத்தல் போன்றவையும் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது. அதுபோல் தடுப்பூசி போடாதவர்களை எதிர்காலத்தில் நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது.