BREAKING NEWS
latest

Saturday, June 12, 2021

சவுதியில் காலவதியான விசிட் விசாக்கள் இலவசமாக புதுப்பிக்கும் பணி துவங்கவுள்ளது

சவுதி செல்வதற்காக இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் எடுத்த காலவதியான விசிட் விசாக்கள் இலவசமாக புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது

Image : சவுதி மன்னர்

சவுதியில் காலவதியான விசிட் விசாக்கள் இலவசமாக புதுப்பிக்கும் பணி துவங்கவுள்ளது

சவுதியில் நேரடியாக நுழைய தற்காலிகமாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சவுதிக்கு வருவதற்காக ஏற்கனவே புதியதாக எடுக்கப்பட்டு காலாவதியான பயன்படுத்த முடியாத விசிட் விசாக்கள் இலவசமாக கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் புதுப்பிக்கும் வகையில் வெளியுறவு அமைச்சகம் ஒரு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட விசாக்களை இலவசமாக புதுப்பித்து வழங்குமாறு மன்னர் சல்மான் உத்தரவிட்டிருந்தார்.

சவுதி அரேபியாவில் நுழைய தற்காலிகமாக பயணத் தடைகளை விதித்துள்ள இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் புதுப்பிக்கும் பணிகள் இதன் மூலம் துவங்கிவுள்ளது.விசா புதுப்பித்தல் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகங்களுடன் இணைந்து மின்னணு முறையில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் காலவதியான விசிட் விசாக்கள மற்றும் பயன்படுத்தப்படாத விசிட் விசாக்களை ஜூலை-31 வரை இலவசமாக புதுப்பிக்க முடியும். நாட்டிற்கு(சவுதிக்கு) வெளியே உள்ளவர்கள் https://enjazit.com.sa/enjaz/extendexpiredvisa என்ற இந்த இ-சேவை தளம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம்.

Add your comments to சவுதியில் காலவதியான விசிட் விசாக்கள் இலவசமாக புதுப்பிக்கும் பணி துவங்கவுள்ளது

« PREV
NEXT »