சவுதி அரேபியாவுக்கு திரும்ப முடியாத வெளிநாட்டினருக்கான இகாமா மற்றும் மறு நுழைவு விசாக்கள் ஜூலை-31 வரை இலவசமாக புதுப்பிக்கப்படும்
Image : மன்னர் சல்மான் அவர்கள
சவுதி திரும்ப முடியாத வெளிநாட்டினருக்கான விசாக்கள் ஜூலை-31 வரை இலவசமாக புதுப்பிக்க மன்னர் உத்தரவிட்டார்
தீவிரமடைந்த கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக சவுதி அரேபியாவுக்கு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர் இகாமா(Work-Permit) மற்றும் மறு நுழைவு(Exit/Re-entry)விசாக்களின் காலாவதி ஜூலை 31 வரை கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக நீட்டிக்கப்படும். இது தொடர்பாக சவுதி அரேபியாவின் ஆட்சியாளர் மன்னர் சல்மான் அவர்கள் இன்று(08/07/21) மாலை உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக, இகாமா மற்றும் மறு நுழைவு விசாக்களை ஜூன்-2 வரை புதுப்பித்து வழங்குவதற்காக மன்னர் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடைய இப்போது இரண்டு மாதங்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டு புதிய ஊத்தரவு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் சவுதி அரேபியாவுக்குள் நுழைவதற்காக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இகாமா மற்றும் மறு நுழைவு விசாக்கள் இலவசமாக புதுப்பித்தல் செய்து வழங்குவது பெரும் உதவியாக இருக்கும்.கோவிட் காரணமாக, இந்தியா உட்பட 9 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது நேரடியாக சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 நாடுகளுக்கான தடை கடந்த வாரம் நீக்கப்பட்டது. இதேபோல் வருகை விசாவும்(Enter-Visa) ஜூலை 31 வரை செல்லுபடியாகும் விதத்தில் புதுப்பித்தல் செய்து வழங்கபடும். சவுதி தேசிய தகவல் மையத்தின் (என்ஐசி) உதவியுடன்,பாஸ்போர்ட் இயக்குநரகம் (ஜவாசத்) தேவையான நடைமுறைகளை நிறைவு செய்யும். ஆவணங்கள் தானியங்கி முறையில்(Auto Renewal) புதுப்பிக்கப்படுகின்றன.