BREAKING NEWS
latest

Monday, June 21, 2021

வெளிநாடு செல்பவர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வெளிநாடு செல்பவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 75 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்பாடு பயன்படுத்தி கொள்ளுங்கள்

வெளிநாடு செல்பவர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட பிரிவில் செல்லும் பயணிகளுக்கு மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு அனுமதி அடிப்படையில் முன்கூட்டியே போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் தற்போதைய சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பின்னர் இரண்டாவது டோஸ் 84 நாட்களுக்கு பிறகுதான் போட வேண்டியுள்ளது. எனினும் வெளிநாடுகளில் கல்வி, வேலை,விளையாட்டு போட்டிகள் போன்ற முக்கியமான காரணங்களுக்காக செல்லும் பயணிகளின் நலன் கருதி, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த பிரிவில் தடுப்பூசி போடுவதற்கு முன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் மாநிலத்தில் ஏற்பாடு செய்துள்ள 75 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தலாம். இதற்கு மாவட்டங்கள் வாரியாக தடுப்பூசி செலுத்திகொள்ள செல்ல வேண்டிய இடங்களின் விபரங்களை தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று(20/06/21) ஞாயற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மையங்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Image : தடுப்பூசி செலுத்த செல்ல வேண்டிய இடங்களின் விபரங்கள்

Add your comments to வெளிநாடு செல்பவர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

« PREV
NEXT »