அபுதாபி பிக் டிக்கெட்டியில் இரண்டாவது முறையாக இலங்கை நாட்டவர் ஒருவர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக பெற்றுள்ளார்.
Image : பரிசுத்தொகை வென்ற ரசிகா ஜேடிஎஸ்
அபுதாபி பிக் டிக்கெட்டியில் இரண்டாவது முறையாக இலங்கை நாட்டவர் இந்திய ரூபாய் மதிப்பில் 30 கோடி வென்றார்
அபுதாபி பிக் டிக்கெட்டின் 228-வது சீரிஸ் வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட நேரத்தில் முதல் பரிசை இலங்கையை சேர்ந்த ரசிகா ஜேடிஎஸ் அவர்கள் 1.5 கோடி திர்ஹாம் (சுமார் 30 கோடி இந்திய ரூபாய்) வென்றார். அவருக்கு டிக்கெட் எண் 213288 வெற்றியை தேடிக் கொடுத்தது. கடந்த 2005 முதல் 48-வயதான ரசிகா அவர்கள் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்.மேலும் துபாயில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
நிதி சிக்கல் காரணமாக அவருடைய குடும்பத்தினர் 2015 ல் இலங்கைக்கு திரும்பினர். 500000 திர்ஹாம் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த நிலையில் ரஸிகா துபாயில் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்தார். நண்பர்களுடன் நடைபயணம் செல்லும்போது,பிக் டிக்கெட் பிரதிநிதி ரிச்சர்டின் தொலைபேசி அழைப்பு வந்தது எனவும்,அவர் தொலைபேசி அழைப்பைப் பெற்றபோது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கட்டுபடுத்த முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் பிக் டிக்கெட் பற்றி நண்பர் ஒருவர் ரசிகாவிடம் கூறியதாகவும், பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரசிகா தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க டிக்கெட் வாங்கத் தொடங்கினார் எனவும், டிக்கெட் சில நேரங்களில் தனியாகவும் அல்லது சில நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்தும் வாங்கியதாக தெரிவித்தார். ஆனால் இந்த முறை முதல் பரிசு டிக்கெட் நண்பர்களுடன் சேர்ந்து வாங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
டிக்கெட்டை எடுக்க ஐந்து நண்பர்கள் தலா 100 திர்ஹாம் கொடுத்தார் எனவும், அதை பயன்படுத்தி டிக்கெட்டை எடுத்தேன் எனவும், எனவே பரிசுத் தொகை நண்பர்களுடன் சேர்ந்து பகிரப்படும் எனவும் தெரிவித்தார். அதுபோல் கடந்த மே-3,2021 அன்று நடந்த பிக் டிக்கெட் போட்டியில் இலங்கையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முகமது மிஷ்பக்(வயது-36) மெகா ஜாக்பாட்டை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.