குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை செல்வதற்கு தற்காலிகமாக தடை விதித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது
Image : Srilankan Airport
குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் கோவிட் -19 பரவல் தடுப்பு (NOCPCO) குழுவிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க, சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் கேப்டன் தெமியா அபேவிக்ரமா அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் நாட்டில் நிலவியுள்ள கோவிட் பரவலை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குவைத், சவுதி, கத்தார், துபாய், மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிருந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலி தடை வருகின்ற ஜூலை 1,2021 அதிகாலை 00.01 முதல் ஜூலை-13,2021 இரவு 23:59 வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது . அதே நேரத்தில் Connection விமானம் மூலம் இந்த நாடுகள் வழியாக இலங்கை வருபவர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Credit : Official Soure