அமீரகத்தில் உள்ள ஆஸ்டர் நிறுவனம் அறிவிப்பு;கோவிட் மூலம் உயிரிழந்த தங்கள் ஊழியர்களின் குடும்பத்திற்கு 10 வருடங்களுக்கு சம்பளம் வழங்கப்படும்
Image credit: டாக்டர்.ஆசாத் மூப்பன்
அமீரகத்தில் ஒரு நிறுவனம் அறிவிப்பு;உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 10 வருடங்களுக்கு சம்பளம் வழங்கப்படும்
அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆஸ்டர் குழுமம் கோவிட் காரணமாக உயிர் இழந்த தங்கள் ஊழியர்களின் குடும்பங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கோவிட் போராட்டத்தின் போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அவர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள அனைத்து ஆஸ்டர் டி.எம் ஹெல்த்கேர் ஊழியர்களுக்கும் மற்றும் வளைகுடா உட்பட தங்கள் நிறுவனத்தில் வேலை செய்கின்ற அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் கோவிட் போராட்டத்தில் தனது சொந்த உயிரிலும் மேலாக நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஊழியர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்று ஆஸ்டர் டி.எம் ஹெல்த்கேர் நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர்.ஆசாத் மூப்பன் தெரிவித்துள்ளார். 'கோவிட் பாதித்த பெரும்பாலான ஊழியர்கள் மீண்டு வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனைவிகள், குழந்தைகள், வயதான பெற்றோர் உள்ளிட்டவரை தனியாக விட்டுவிட்டு இந்த உலகில் இருந்து தங்களது சில ஊழியர்கள் விடைபெற்றனர்.
அவர்களின் ஆத்மாக்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும்,அவர்களின் குடும்பத்தை ஆதரிக்கவும் முடிவு செய்தோம் என்றார். ஏனெனில் இறந்த ஊழியர்களில் பலர் தங்கள் குடும்பங்களுக்கு ஒரே வருமான ஆதாரமாக இருந்தனர் ”என்றும் வருத்ததுடன் ஆசாத் மூப்பன் கூறினார். மத்திய கிழக்கு மற்றும் இந்தியா உட்பட ஏழு நாடுகளில் 28,000 கோவிட் நோயாளிகளுக்கு ஆஸ்டர் நிறுவனம் இதுவரையில் சேவை செய்துள்ளது எனவும், 1,662,726 பேர் பரிசோதிக்கப்பட்டனர் எனவும், ஆஸ்டர் டி.எம் ஹெல்த்கேர் 27 மருத்துவமனைகள், 115 கிளினிக்குகள் மற்றும் 225 மருந்தகங்களை கொண்டு 21,000 ஊழியர்களுடன் இயங்கி வருகின்றது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.