குவைத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும்;கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது பெரும் கவலை ஏற்படுத்துகிறது
குவைத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகின்றன
குவைத்தில் தடுப்பூசி விநியோகம் செய்யும் பணிகளில் விரைவான முன்னேற்றம் இருந்தபோதிலும், தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், கடந்த சில திடிரென பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து தினசரி பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக 2,000-ஐ நெருங்கியுள்ளது. இது அனைத்து தரப்பினரையும் பெரும் கவலையடைய செய்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் காணப்படும் டெல்டா மாறுபாடு கோவிட் வைரஸின் பாதிப்பும் குவைத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில்,சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை என்பதும், அத்தகைய குடிமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுவதும் கோவிட் பரவுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒரு பெரிய தடையா இருப்பதாக தெரிகிறது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. தற்போது நாட்டின் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் குறிபிட்ட அளவிலான எண்ணிக்கையில் மக்கள் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு தடுப்பூசியை வழங்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மேலும் உள்நாட்டில் Domestic worker ஆக பணிபுரிபவர்களில் நல்லொரு சதவீதமும் தொழிலாளர்களுக்கும் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் விசாகாலம் முடித்தும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளனர். கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சட்டவிரோதமாக இருப்பவர்கள் முக்கிய காரணம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோல் மற்றொரு நெருக்கடி என்பது தடுப்பூசி போடாதவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்டவர்கள்மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில்நுழையக்கூடிய கடுமையான கட்டுப்பாடுகள் வரும் நாடுகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை பெரும் சிக்கலில் ஆழ்த்தும். மேலும் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு தடுப்பூசி முடிந்தவரை பெரும்பாலான மக்களை சென்றடைய வேண்டும். இல்லையெனில் கோவிட் பரவி அதிகரிக்கும். இருப்பினும் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து அரசாங்கமும், பொதுமக்களும் கவலை கொண்டுள்ளனர்.