குவைத் தினார் உலகில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நாணயம் என்று நாணயங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது
Image : Kuwait Dinners
உலகின் மிக மதிப்புமிக்க நாணயமாக குவைத் தினார் தேர்வு செய்யப்பட்டுள்ளது
உலகின் மிக மதிப்புமிக்க நாணயமாக குவைத் தினார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 180 க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்களில் குவைத் தினார் இந்த ஒன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்க டாலர் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டு ஆகியவை உலகின் இரண்டு வலுவான நாணயங்களாக கருதப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு நாணயங்களை விட மதிப்புமிக்க பல நாணயங்கள் உலகில் புழக்கத்தில் உள்ளது என்று இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள குட் ரிட்டர்ன் இணையதளம் தெரிவித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள குவைத் தினார் ஆனது 1961 ஆம் ஆண்டில் குவைத் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்கன் டாலருக்கு நிகரான 1 குவைத் தினாரின் வர்த்தக மதிப்பு 3.32 டாலர்கள் ஆகும். இரண்டாவது இடத்தில் பஹ்ரைன் தினார் உள்ளது 1 தினார் ஆனது 2.65 டாலர்கள் வர்த்தக மதிப்பு பெறுகிறது. மூன்றாவது இடத்தில் ஓமான் ரியால் உள்ளது. மேலும் 1961 வரை குவைத்தில் இந்திய ரூபாய் தான் அதிகாரப்பூர்வ நாணயமாக பயன்படுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல் ஆகும்.