குடும்பத்தினருக்கு பயந்து காதல் மனைவியை தன்னுடைய வீட்டில் 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் தங்க வைத்த கணவர் அதிர்ச்சியும் சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது
Image credit:தம்பதிகள் மற்றும் மனைவி
குடும்பத்தினருக்கு பயந்து காதல் மனைவியை 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் தங்க வைத்த கணவர்
நம்மால் ஒருவரை ஒரு வீட்டில் யாருக்குமே தெரியாமல் எத்தனை நாட்கள் தங்கவைக்க முடியும். ஒரு சில நாட்களில் எப்படியும் வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் கேரளா மாநிலம் பாலக்காடு,நென்மாற,ஆயலூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான் இவருடைய காதல் மனைவியான சஜிதாவை தன்னுடைய குடும்பத்தினருக்கு பயந்து 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் அதே வீட்டில் தங்க வைத்த அதிர்ச்சியும் சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது. இருவரும் வெவ்வேறான மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் நேற்று முதல் வெளியான நிலையில் இன்று அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சஜிதா தனது பக்கத்து வீடு என்பதால் தன்னுடைய அக்கா மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ளதால் அடிக்கடி வருவாள் எனவும் இதனால் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது எனவும், இது யாருக்கும் தெரியாது எனவும்,பின்னர் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில் யாருக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் வைத்து தாலி காட்டினேன் எனவும் பின்னர் அவள் அவளுடைய வீட்டிற்க்கு சென்றாள் எனவும் தெரிவித்தார்.
Image : பெண்மணி தங்கியிருந்த அறை
பின்னர் சஜிதாவின் வீட்டில் பையனை பார்க்க துவங்கிய போது அதற்குமேல் தன்னுடைய வீட்டில் நிற்க முடியாது என்று கூறவே,ஒருநாள் ரகுமான் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வீட்டில் உள்ள அவர் தங்கியிருந்த அறையில் கொண்டுவந்து தங்க வைத்தார். மேலும் கழிவறை இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் வெளியே சென்று குளிப்பது மற்றும் கழிவறை செல்வது உள்ளிட்ட அன்றாட கடன்களை செய்தார். ரகுமான் தன்னுடைய அறையில் யாரும் நுழையாத வண்ணம் பிரத்யேகமான பூண்டை பயன்படுத்தினார். மேலும் அத்தியாவசிய தேவைக்கு யாரும் பார்க்காமல் வெளியே செல்லும் விதத்தில் தன்னுடைய அறையின் ஜன்னல்கள் வடிவமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
தன்னுடைய வீட்டில் தனக்கு வழங்குகின்ற உணவை இருவரும் பகிர்ந்து சாப்பிட்டு வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக தன்னுடைய வீட்டில் தொடர்ந்து தங்க முடியாத நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு மற்றொரு வீட்டை எடுத்த ரகுமான் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக புதுவிட்டிற்கு அழைத்து சென்றார். இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக தம்பியை காணாத ரகுமானின் அண்ணன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து கண்டுபிடிக்க முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. இதற்கிடையே சஜிதா மாயமான வழக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சஜிதாவின் பெற்றோர் அவள் இறந்து விட்டதாக கருதினர்.
ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையில் செல்லும்போது ரகுமானின் அண்ணன் அவரை அடையாளம் கண்டார். சாலையில் கொரோனா காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தார். தொடர்ந்து ரகுமானை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதன் காரணமாக இவர்களின் தலைமறைவு வாழ்க்கை வெளியுலகுக்கு தெரிய வந்தது என்றார். இதன் காரணமாக தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மற்றவர்களை போன்று தாங்களும் எந்த பிரச்சனையும் இன்றி வெளிப்படையாக வாழமுடியும் என்று தெரிவித்தார். அதுபோல் இருவரும் தங்கள் இருவரின் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே மீதியுள்ள வாழ்கையும் மகிழ்ச்சியாக வாழ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இருவரும் திருமணம் செய்யும் நேரத்தில் சஜிதாவுக்கு 18-வயது மற்றும் ரகுமானுக்கு-23 வயதும் இருந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 28 மற்றும் 33 வயது ஆகிறது.