நண்பன் வழங்கிய கஞ்சா பார்சல்;அமீரக நீதிமன்றம் இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50,000 திர்ஹம் அபராதமும் விதித்துள்ளது
Image : Dubai Court
நண்பரின் கஞ்சா பார்சல்;அமீரக நீதிமன்றம் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கஞ்சா கைவசம் வைத்திருந்து பிடிபட்ட இளைஞர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேரத்தில் தான் நிரபராதி என்றும்,தனது நண்பர் தனக்கு பார்சல் கொடுத்ததாகவும், நண்பர் வழங்கிய பார்சலின் உள்ளே பழங்கள் என்று தான் நினைத்ததாக அந்த இளைஞர் நீதிமன்றத்தில் வாதித்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் அவரது நண்பர் தாயகத்தில் இருந்து அமீரகம் வருவதற்காக டிக்கெட்டுக்கான பணம் செலுத்தினார் எனவும், இங்கு வேலை தேடுவதற்காக உதவி செய்வதாகவும் உறுதிமொழி அளித்தார் எனவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வேறு ஒருவரிடம் ஒப்படைக்கும்படி அந்த பார்சலை வழங்கினார் எனவும் தெரிவித்துள்ளர். இருப்பினும் கடந்த பல மாதங்களாக நடந்த வழக்கு விசாரனைக்கு பிறகு, நீதிமன்றம் இளைஞனை குற்றவாளியாக கண்டறிந்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50,000 திர்ஹம் அபராதமும் விதித்துள்ளது.
இந்த இளைஞன் கடந்த ஆண்டு நவம்பரில் துபாய் விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் 3-இல் வைத்து கைது செய்யப்பட்டான். அவருடைய உடமைகளை ஸ்கேன் செய்யும் போது, சந்தேகத்திற்கிடமான சில பொருட்கள் பையில் உள்ளே இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விரிவாக பையை பிரித்து பரிசோதனை நடத்தினர். பின்னர் அவருடைய பையில் இருந்து இரண்டு பெரிய பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும், இது ஒரு போதைப்பொருள் என்று தனக்குத் தெரியாது என்று அந்த இளைஞன் உறுதியாக நின்று நீதிமன்றத்தில் வாதாடினார். இவர் ஒரு ஆசியா நாட்டவர் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக எந்த நாட்டவர் என்று குறிப்பிடப்படவில்லை.