குவைத்தில் ஆகஸ்டு முதல் வெளிநாட்டினர் நுழைய அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு முன்பதிவு துவங்கிவுள்ளது
Image credit: Kuwait Airways
குவைத்திற்கான பயணச்சீட்டு முன்பதிவை விமான நிறுவனங்கள் துவங்கிவுள்ளது
குவைத்தில் வருகின்ற ஆகஸ்ட்-1,2021 முதல் வெளிநாட்டினர் நிபந்தனைகளுடன் நுழைய அனுமதி வழங்கப்படும் என்ற அமைச்சரவை முடிவின் அடிப்படையில் குவைத் அரசு விமான நிறுவனங்களான ஜசீரா ஏர்வேஸ் மற்றும் குவைத் ஏர்வேஸ் ஆகியவை இந்தியாவின் முக்கிய இடங்களில் இருந்து குவைத்திற்கான விமான பயணச்சீட்டு முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன. 52,000 முதல் 62,000 ரூபாய் வரையிலான கட்டணத்தில் ஒவ்வொரு விமான நிலையங்களை பொறுத்து மாறுபட்ட விலையில் டிக்கெட் கிடைக்கிறது. மேலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டால் பயணச்சீட்டு கட்டணம் திரும்ப கிடைக்கும். சில நேரம் இந்த முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பயணிகள் சொந்தநிலையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு குறித்த கூடுதல் விபரங்கள் வரும் நாட்களில் தெளிவாக அறிய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடைய விமான சேவை(Travel Agencys) சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் கூற்றுப்படி குவைத் திரும்புவதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் மக்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். முன்பு பலமுறை நடந்ததைப் போல, அரசாங்கத்தின் முடிவில் எதிர்பாராத மாற்றங்கள் எற்படலாம் என்ற கவலை பலருக்கும் சந்தேகங்களை எழுப்புகிறது. மேலும் வெளிநாட்டினர் நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆகஸ்ட்-1 முதல் தற்போதைய அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் அன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப குவைத் திரும்ப விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். அதுபோல் விமான சேவைகள் தொடங்கியவுடன் அதிக விமான பயணச்சீட்டு முன்பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்று குவைத் Travel and Tourism கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் அல் கராஃபி அவர்கள் தெரிவித்துள்ளார்.