ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்று மாதங்கள் திறந்தவெளியில் வேலை செய்ய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது
அமீரகத்தில் மூன்று மாதங்கள் திறந்தவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
அமீரகத்தில் கோடைகாலத்தில் உயர் வெப்பநிலை வாட்டி வதைக்கும் காலங்களில் திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த வருடத்தின் மத்தியான ஓய்வு நேரத்தை ஐக்கிய அரபு அமீரகம் இன்று(02/06/21) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகின்ற ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரையில் மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தொழிலாளர்கள் திறந்த வெளிகளில் வேலை செய்ய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடையினை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தொழிலாளர்கள் பிற்பகல் இடைவேளையின் போது திறந்தவெளியில் வேலை செய்ய அனுமதி இல்லை. கடந்த ஒரு வாரமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 47-49 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. மேலும் ஜூன்-15,2021 முதல் இந்த சட்டத்தை மீறும் மற்றும் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் நிறுவனத்திற்கு அபராதமாக ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் முதல் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை பயன்படுத்தினால் அதிகபட்சமாக 50,000 திர்ஹம் வரையில் அபராதம் விதிக்கப்படும். இதற்கிடையே குவைத்தில் இந்த உத்தரவு ஜூன்-1 முதல் நடைமுறையில் வந்துள்ளது. வருகின்ற ஆகஸ்டு-31வரையில் இந்த விதிமுறை நடைமுறையில் இருக்கும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் திறந்தவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.