அமீரகத்தில் இன்று முதல் மத்தியான ஓய்வு நேரம் நடைமுறையில் வந்துள்ளது;மீறினால் பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Image : தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் நேரம்
அமீரகத்தில் இன்று முதல் மத்தியான ஓய்வு நேரம் நடைமுறையில் வந்துள்ளது;மீறினால் பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும்
அமீரகத்தில் கடுமையான வெப்பத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இன்று முதல்(ஜூன்-15,2021) மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை கட்டாய மத்தியான ஓய்வு இடைவேளை வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு எமிரேட் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிடுள்ளது. மேலும் மதிய ஓய்வு இடைவேளை செப்டம்பர்-15,2021 வரை தொடரும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோடைகாலத்தில் கடுமையான வெப்பத்திலிருந்து கட்டுமானம் போன்ற சில துறைகளில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிற்பகல் ஓய்வு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி இந்த நேரத்தில் தொழிலாளர்களை வேலை செய்ய வைக்கின்ற எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் என்ற விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும், இதுவே ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலாளிகளை பயன்படுத்தினால் அதிகபட்சமாக 50,000 திர்ஹம் வரையில் அபராதமாக விதிக்கப்படும்.
மேலும் தொழிலாளர்களின் அன்றாட வேலை நேரம் காலை மற்றும் மாலை ஷிப்டுகள் சேர்த்து எட்டு மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு தொழிலாளி எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், அவர்களுக்கு தனது நிறுவனம் கூடுதலாக Overtime சம்பளம் வழங்க வேண்டும். கூடுதலாக, இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காயங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அதற்கு பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களை முதலாளிகள் வழங்க வேண்டும்.
அதுபோல் இன்றுமுதல் செப்டம்பர்-15 வரையில் நடைமுறையிலுள்ள சட்ட சம்பந்தப்பட்ட எந்தவொரு சட்டமீறல்களையும் கட்டணமில்லா 80060 என்ற எண்ணுக்கு அழைத்து புகாரளிக்கலாம். இந்த இலவச சேவை நான்கு மொழிகளில் 24 மணிநேரமும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் உதவி மையத்தை செயல்படுத்தி வருகின்றனர்.