கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டினரை குவைத்தில் நுழைய அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மாலையில் செய்தி வெளியாகியுள்ளது
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டினரை குவைத்தில் நுழைய அனுமதிக்க அமைச்சரவை முடிவு
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டினரை குவைத்துக்குள் அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக இன்று(17/06/21) வியாழக்கிழமை மாலையில் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மஸ்ராம் அறிவித்தார். அவருடைய அறிக்கையில் வருகின்ற ஆகஸ்ட்-1 முதல் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குவைத் சுகாதாரதுறை அமைச்சகத்தால் அங்கீகாரம் வழங்கியுள்ள Oxford/Astrazeneca, Pfizer, Moderna மற்றும் Johnson & Johnson தடுப்பூசிகளைப் பெற்ற வெளிநாட்டினர் நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் குவைத் கொரோனா அவசரக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் வெளிநாட்டவர்களின் நீண்டகாலமான எதிர்பார்ப்புக்கு குவைத் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. குவைத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் வெளிநாட்டவர்கள் நாட்டில் நுழைய 72 மணிநேரத்திற்கு முன்பு எடுத்த PCR பரிசோதனை சான்றிதழ் எடுக்க வேண்டும் தொடர்ந்து குவைத்தில் நுழைந்து 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் தங்கியிருக்க வேண்டியது இருக்கும்.குவைத்தில் தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் குவைத்திற்கு திரும்ப முடியும். தடுப்பூசி போடாத குவைத் குடிமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்படும்.
இதற்கிடையே கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடாத நபர்கள் 6,000 சதுர மீட்டருக்கும் அதிகமாக உள்ள உணவகங்கள், மால்கள் மற்றும் கடைகளுக்குள் நுழைவதைத் தடுக்க அமைச்சரவைக் கூட்டம் இன்று முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட "டெல்டா" வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து சுகாதார அமைச்சகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு என்று தெரிகிறது. இதுபோல் மற்றொரு அறிவிப்பு வரும் வரை மால்கள் இரவு 8 மணிக்குள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.