குவைத்தில் கோவிட் காரணமாக உயிரிழந்த இந்திய தொழிலாளர்களில் குறைந்த வருமானம் பெற்றுவந்த அவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சத்துக்கான உதவிகள் வழங்கப்படும்
Image : தூதர் சிபி ஜார்ஜ்
குவைத்தில் கோவிட் மூலம் உயிரிழந்த ஏழ்மையான இந்திய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 1 லட்சத்துக்கான உதவிகள் வழங்கப்படும் என்று தூதர் அறிவிப்பு
குவைத்தில் கோவிட் தொற்றுநோயால் உயிரிழந்த ஏழ்மையான இந்திய வீட்டுத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்துக்கான உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அறிவித்தார். 120 தினாருக்கும் குறைவாக சம்பளம் பெற்றுவந்த தொழிலாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று இந்திய தூதரகத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற Open House நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் இதை அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில் குவைத்தில் உள்ள Indian Community Support Group-யின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக தூதர் தெரிவித்தார்.
மேலும் கோவிட் பாதிப்புக்குள்ளாகி வெளிநாடுகளில் இந்திய வெளிநாட்டவர்களை அரசாங்கங்கள் புறக்கணிக்கின்றனர் என்ற புகார்களுக்கு மத்தியில் தனிப்பட்ட முயற்சியாக ஒரு வரலாற்று முக்கியத்துவமான அறிவிப்பை வெளியிட்டு குவைத் இந்திய தூதரகம் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது. குறைந்தபட்சமாக 100 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த Category-யின் கீழ் வருவார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விரிவான விபரங்கள் இந்திய தூதரகத்தில் நடைபெற்று வருகின்ற Open House நிகழ்ச்சிக்கு பிறகு வெளியாகும் செய்திக்குறிப்பில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.