BREAKING NEWS
latest

Monday, July 26, 2021

குவைத்தில் ஆகஸ்ட்-1,2021 முதல் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனை அடிப்படையில் வெளிநாட்டவர்கள் நுழைய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

குவைத்தில் ஆகஸ்ட் 1 முதல் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்த இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்

Image : Kuwait City

குவைத்தில் ஆகஸ்ட்-1,2021 முதல் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனை அடிப்படையில் வெளிநாட்டவர்கள் நுழைய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

குவைத்தில் ஆகஸ்ட்-1,2021 முதல் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி வெளிநாட்டினர் நுழைய அனுமதிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் வேறு எந்த திருத்தங்களையும் செய்யாமல் அமைச்சரவை இந்த ஒப்புதல் அளித்தது. அதில் முக்கியமான ஒன்று செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி(Validity Visa) மற்றும் குவைத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர்(Pfizer), ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனெகா(Oxford-AstraZeneca), மாடர்னா(Moderna) தடுப்பூசி இரண்டு டோஸ் பூர்த்தி செய்திருக்க வேண்டும் அல்லது ஜான்சன் & ஜான்சனின்(Johnson & Johnson) ஒரு டோஸ் எடுத்திருக்க வேண்டும், கூடுதலாக 72 மணி நேரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் முடிவு ஆகியவையும், தொடர்ந்து குவைத் விமான நிலையத்திற்கு வந்த பிறகு மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். கூடுதலாக 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட்-1,2021 முதல் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்த இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் குவைத்துக்குள் நுழைய முடியும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

ஆனால் குவைத் சுகாதாரத்துறை வெளியிட்ட தளத்தில் இந்தியாலில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட குவைத் நுழைய காத்திருப்பவர்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவேற்றிய நிலையில் அதற்கு அனுமதி வழங்கி பதில் வந்ததாக தெரியவில்லை. மேலும் நாட்டில் நுழைய இந்த சான்றிதழ் Verification முக்கியமான ஒன்றாக இருக்கும் என்பதால் சான்றிதழ் Verification செய்து அனுமதி வழங்காத வரையில் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்தாலும் இந்தியர்கள் குவைத்தில் நுழைய முடியாது என்றே தெரிகிறது. அதேபோல் Covishield மற்றும் Oxford–AstraZeneca ஆ‌கிய இரண்டு தடுப்பூசிகளும் ஒன்று என்பதால் குவைத் சுகாதாரதுறை இதற்கு அனுமதி வழங்கப்படும் என்று இந்திய தூதர் சிபி ஜார்ஜ் முன்னர் தெளிவுபடுத்தியிருந்தார்.

Add your comments to குவைத்தில் ஆகஸ்ட்-1,2021 முதல் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனை அடிப்படையில் வெளிநாட்டவர்கள் நுழைய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

« PREV
NEXT »