BREAKING NEWS
latest

Tuesday, July 6, 2021

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து 146 பயணிகளுடன் விமானம் அமீரகம் புறப்பட்டது

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து 146 பயணிகளுடன் விமானம் அமீரகம் புறப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து 146 பயணிகளுடன் விமானம் அமீரகம் புறப்பட்டது

ஐக்கிய அரபு அமீரக அரசின் சிறப்பு அனுமதியுடன் 146 பேர் கொச்சியில் இருந்து அமீரகத்திற்கு புறப்பட்டு சென்றதாக கொச்சி விமான நிலைய அதிகாரிகள் பேஸ்புக்கில் தெரிவித்தனர். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரேபிட் பி.சி.ஆர் கோவிட் பரிசோதனையை செய்வதற்காக வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று(05/07/21) அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை முடிக்கப்பட்ட நிலையில் காலை 8.15 மணிக்கு அபுதாபியைச் சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் ஊழியர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு Charter எட்டிஹாட் விமானம் புறப்பட்டு சென்றது எனவும் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் டெர்மினல் 3-இல் புதிதாக அமைந்துள்ள ரேபிட் பி.சி.ஆர் மையத்தில் தற்போது ஒரே நேரத்தில் 200 பேரை பரிசோதனை செய்து அரை மணி நேரத்திற்குள் முடிவுகளைப் பெற முடியும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இன்று(06/07/21) கொச்சியில் விமான நிலையத்தில இருந்து ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவுக்கு தனியாக கேரளா மாநிலம் மலப்புரம், திருர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முகமது தாயில் பறந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் வளைகுடாவின் முன்னணி நிறுவனமான AAK குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். Business Partner விசாவின் நன்மையை பயன்படுத்தி அவர் புறப்பட்டு சென்றார். இதற்கான பயணச்சீட்டு கட்டணமாக 8,000 திர்ஹாம் (1.6 லட்சம் இந்திய ரூபாய்) செலுத்தியுள்ளார்.முகமது அலி கூறுகையில் தான் ஒரே பயணி என்பதால் விமான நிலையத்திலும் விமானத்திலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

பயணத்தடை நிலுவையிலுள்ள நிலையிலும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கோல்டன் விசா, சிவில் விசா, Business Partner விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அமீரக அதிகாரிகளால் சிறப்பு அனுமதி வழங்கபடும் பயணிகள் கட்டுப்பாடுகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிட் பரவலை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

Add your comments to பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து 146 பயணிகளுடன் விமானம் அமீரகம் புறப்பட்டது

« PREV
NEXT »