கத்தாரில் வந்திறங்கிய 17 இந்தியர்கள் நிபந்தனைக்கு இணங்காததற்காக திருப்பி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளன
Image : Doha Airport
கத்தாரில் வந்திறங்கிய 17 இந்தியர்கள் திருப்பி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்;காரணம் இதுதான்....
கத்தார் விமான நிலைய அதிகாரிகள் இந்தியாவில் இருந்து தோஹா விமானம் நிலையத்தில் வந்திறங்கிய 17 இந்தியர்களை நிபந்தனை பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக திருப்பி இந்தியாவிற்கே அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதற்காக காரணமும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமுதல் வருகின்ற யாரும் இந்த தவறை செய்ய வேண்டாம். நேற்று(22/07/21) காலை 9 மணிக்கு On-Arrival விசா மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் தோஹா வந்திறங்கிய 17 இந்தியர்கள் 10 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இந்தியாவிற்கே மாலையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதற்கான காரணமாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தில் On-Arrival விசா மூலம் வருகின்ற பயணிகளிடம் ஐந்தாயிரம் கத்தார் ரியால்கள் அல்லது அதற்கு இணையான இந்திய ரூபாய் பயணியின் வங்கி கணக்கிலோ அல்லது பணமாகவோ கைவசமோ வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு இணங்காததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 17 பேரும் அவர்கள் காலையில் வந்த அதே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாயகம் திரும்பினர். இந்தியா திரும்பிய 17 பேருமே சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக கத்தார் வந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தியா திரும்புவதற்காக ஒவ்வொரு பயணியிடமிருந்தும் ஏர் இந்தியா 650 ரியால்கள் வசூலித்ததாக வருத்தத்துடன் பயணிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.மேலும் திரும்ப இந்திய அழைத்துச் செல்ல 2000 ரியால்கள் கட்டணமாக விமான நிறுவனம் கேட்டதாகவும் தாங்கள் வாக்குவாதம் செய்த நிலையில் கட்டணத்தை குறைத்ததாகவும் அவர்கள் வருத்ததுடன் தெரிவித்தனர். அதேபோல் On-Arrival விசா கத்தார் வருகின்ற பயணிகளின் கைவசமோ அல்லது வங்கி கணக்கிலோ பணம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகளோ அல்லது இந்தியாவில் உள்ள டிராவல் ஏஜன்சியோ தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் அவமானப்படுத்தப்பட்டதாக பயணிகள் வருத்ததுடன் தெரிவித்தனர்.