குவைத்தில் வங்கி கணக்கு விபரங்களை ஏமாற்றி பெற்று பணம் திருடிய இந்தியர்கள் உள்ளிட்ட 4 பேர் இரகசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்
Image : Kuwait Police
குவைத்தில் வங்கி கணக்கு விபரங்களை ஏமாற்றி பெற்று பணம் திருடிய இந்தியர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
குவைத்தில் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை ஏமாற்றிப்பெற்று பணம் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் மற்றும் ஒருவர் எகிப்து நாட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அரபு நாடு ஒன்றில் வசித்து இந்த குற்றத்தை செய்வதற்காக தலைமை தாங்கும் கும்பலின் தலைவனை பிடிக்க குவைத் இரகசிய பிரிவு அதிகாரிகள் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஒரு முன்னணி நிறுவனத்தின் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த கும்பல் சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்றும் கிரெடிட் கார்டில் தற்போது உங்களுக்கு கிடைக்கும் கடன் வரம்பை இரட்டிப்பாக்க முடியும் என்றும் பாதிக்கப்பட்ட நபருகளை நம்பவைத்து இதற்காக, நிறுவனத்தின் போலி சின்னத்துடன் கூடிய விண்ணப்ப படிவம் மின்னஞ்சல் மூலம் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அனுப்பி, விண்ணப்ப படிவத்தை அவர்கள் பூர்த்தி செய்யும் கணக்கு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நபரின் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி பணத்தை பறித்துள்ளனர். இவர்கள் வலையில் சிக்கி பல குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் பணத்தை இழந்துள்ளனர். இதை தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரகசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.