குவைத்தில் இந்தியரை கொலை செய்த வழக்கில் குடிமகனான இளைஞரை இரகசிய பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது
Image : கொலை செய்யப்பட்ட இந்தியர் பாஷா
குவைத்தில் நேற்று நடந்த இந்தியர் கொலையில் குற்றவாளியான குவைத்தி இளைஞரை இரகசிய பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்
குவைத்தில் உள்ள G7 நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பொருட்களை Delivery செய்யும் பிரிவில் ஓட்டுனராக வேலை செய்துவந்த இந்தியரை நேற்று(11/07/21) அதிகாலையில் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்ட தகவலை குவைத் காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியர் கொலை செய்யப்பட்ட நேரத்தில் வெளியான முதல்கட்ட செய்திகளில் அவர் உணவக Delivery ஊழியர் என்ற விதத்தில் செய்திகள் வெளியானது.இந்நிலையில் உயிரிழந்த இந்தியர் மற்றும் கொலையாளி குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
150 தினார் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொலையாளியான 26-வயதான குவைத் இளைஞர் Order செய்தார் எனவும், இதை இந்தியரான பாஷா ஷேக்(வயது-41) என்பவர் நேற்று அபுஃபத்தீராவில் உள்ள கொலையாளியின் வீட்டிற்கு Delivery செய்ய எடுத்துக்கொண்டு சென்றார் எனவும், 150 தினார் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பாஷாவிடம் இருந்து பெற்ற பின்னர் பணம் கொடுக்க மறுத்து குற்றவாளி அங்கிருந்து செல்ல முயன்ற நிலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரும்புக் கம்பியால் இந்தியரை தாக்கியதாகக் 26-வயதான குற்றவாளி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிறகு நடந்த முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளான்.
மேலும் கொலை செய்யும் நோக்கத்துடன் தான் இது செய்யவில்லை என்றும் குற்றவாளி புலனாய்வு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும் இதுபோன்று பல தாக்குதல் வழக்குகளில் தற்போது கைது செய்த நபர் இதற்கு முன்பும் குற்றவாளி எனவும் மற்றொரு வழக்கில் தண்டனை அனுபவித்த பின்னர் ஒரு மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இதேபோல் பணம் செலுத்தாமல் முன்பும் இதுபோல் பொருட்களை ஆர்டர் செய்து பின்னர் பொருட்களை எடுத்து வருகின்ற ஓட்டுநர்களைத் தாக்கும் போக்கு அவருக்கு இருந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அதுபோல் தொடர்ந்து நடைபெற்ற தேடுதலுக்கு பிறகு நேற்று நள்ளிரவு குற்றவாளியை அதிகாரிகள் பதுங்கியிருந்த அந்தலூஸ்(Andalus) பகுதியில் இருந்து கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே நிறுவனத்தின் உரிமையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உயிரிழந்த பாஷாவிற்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் எனவும் அவர்களுக்கு பாஷாவின் சம்பளம்,சலுகைகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வழக்கு தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க அனைத்து முயற்சியும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.